அப்பாவின் பாசம்

 


அப்பாவின் பாசம்

அம்மாவின் கருவறை போன்றே தாங்கி பிடிக்கும் அப்பாவின் கைகளும் புனிதமானது.

தாங்கிப்பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்தது இல்லை.

இரவு தூங்கும் பொழுது அப்பாவின் சுருங்கிய முகமும் ஆழ்ந்த உறக்கமும் அப்பாவின் கஷ்டத்தை உணர வைக்கும்.

தன் தலைக்கு மேலே நம்மை உட்கார வைத்து  அழகு பார்க்கும் அப்பாவை நாம் ஒருபோதும் தலைகுனிய வைத்து விடக்கூடாது.

நம்மை நேசிப்பவரும் நமக்காக சுவாசிப்பவரும் நம் அப்பா மட்டுமே.

அடித்தாலும் அன்பால் அணைக்கும் ஒரே மனிதர்  அப்பா.

ஒரு பெண்ணை தந்தையைக் காட்டிலும் வேறு யாராலும்  அதிகமாக நேசிக்க முடியாது.

தோள் மீதும் மார்பு மீதும் நமைத் தாங்கி வழிகாட்டும் கலங்கரை விளக்கு அப்பா.

பத்து மாதம் சுமந்த தெய்வம் அம்மா
வாழ்க்கை முழுக்க சுமக்கும் தெய்வம் அப்பா.

அப்பாவின் அன்பு எப்போதும் கொண்டாடப்படுவதில்லை

அப்பா உமக்கு ஆயிரம் நமஸ்காரங்கள் 🙏

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)