முத்து
உயிரெழுத்தில்'அ'எடுத்தேன்..
மெய்யெழுத்தில் 'ம்' எடுத்தேன்..
உயிர்மெய் எழுத்தில் 'மா' எடுத்தேன்!
அழகு தமிழில் கோர்த்தெடுத்தேன்!
அவளே என் 'அன்பு அம்மா' என்ற முத்துமாலை!
*****
பெண்ணின் அன்பு சிப்பிக்குள் இருக்கும் முத்து போன்றது!
அதை அழகாக பொறுமையாகத் திறக்க வேண்டும்!
*****
உன் காதல் கவிதைகளில் இருப்பது எழுத்துக்கள் அல்ல..
உன் மனதால் பார்த்து அன்பால் எழுதிய முத்துக்கள்!
******
சிப்பியினுள் முத்து இருப்பதை முதலில் கண்டு பிடித்தவர் வாஸ்கோடகாமா!
முத்தை கடவுளின் பரிசாக எண்ணியவர்கள் அரேபியர்கள்!
கடலிலிருந்து நேரடியாகக் கிடைத்தவையே நல்முத்துக்கள்!
முதல் செயற்கை முத்தை உருவாக்கியவர் வில்லியம் சாவில் கென்ட் (William Saville Kent) என்கிற ஆஸ்திரேலியர்!
இலக்கிய வர்ணனைகளில் புலவர்கள் அதிகாலையில் இலைகளின் மீது படரும் பனித்துளிகளையும், பெண்களின் கண்களையும் முத்துக்கள் என்று வர்ணிப்பர்.
கருத்துகள்
கருத்துரையிடுக