இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

படம்
அன்புக் கவிஞரே! தங்கள் உருவம் எளிது! பாடும் குரலோ இனிது! என்றும் எமது கண்களில் தெரியும் உங்கள் புன்னகையும் காதுகளிலும் ஒலிக்கும்  தேன் அமுதக் குரலும் தங்கள் இனிய குணங்களால் எம் உள்ளத்தில் வாழ்கிறீர்! வாழ்க நீ பல்லாண்டு! உலகம் உள்ளவரை உன் பாடல்கள் வாழும்!

3.பிள்ளை வரம் வேண்டி..(100வரிகதை)

படம்
இன்று வெள்ளிக்கிழமை. காலை கோவிலில் யாரோ செய்த அன்னதான சாப்பாடு கண்களைக் கிறங்க வைக்க அசந்து போய்த் தூங்கி விட்டார் இசக்கிமுத்து.  மாலை நேரம் பக்தர் கூட்டம் அதிகம் வந்தால் சில்லறைகள் கூட சேரும் என்ற அவசரத்தில் தான் வழக்கமாக அமரும் இடம் நோக்கி வேகமாகச் சென்றார். அங்கு புதிதாக ஒரு கிழவி அழுக்கில்லாத புடவையுடன் அவர் இடத்தில்! ...ஏம்மா நீ பிச்சைக்கு புதுசா? நல்ல டிரஸ் போட்டிருக்க. எங்களுக்கு போட்டியா இங்கயும் வந்துட்டயா?... ...அட போப்பா. முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடி பிள்ளை வரம் வேண்டி இதே கோவில்ல 48 நாள் பிச்சை எடுத்த அனுபவம் இருக்குப்பா... அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டார் இசக்கிமுத்து!

உணவு

படம்
பசிக்கு உணவு சாப்பிடும்போது அதன் ருசியை நாம் உணர்வதில்லை.. பசியில்லாமல் சாப்பிடும்போது அது ருசியாக இருந்தாலும் சாப்பிட முடிவதில்லை. ****** உணவு உடை இருப்பிடம் தந்து நம்மைக் காப்பாற்றும் இயற்கையை நாம் மாசுபடுத்துவது நம்மையே சிறிதுசிறிதாக அழித்துக் கொள்வது போல் என்பதை அறியவில்லையே நாம்..

அப்பா உங்களுக்காக...

படம்
  அப்பா உங்களுக்காக... அப்பா..அவர் ஒரு சரித்திரம் அப்பா என்றதும் மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? அப்பா-மகள் உறவு சற்று ஆழமானது... வித்யாசமான பாசம் கொண்டது!  இந்த வார்த்தையை சொல்லும் போதே மனம் சிலிர்க்கிறது..கண்கள் குளமாகிறது..! முதல் குழந்தை பெண்தான் வேண்டும் என்று என் அப்பா ஆசைப்பட்டு பிறந்தவளாம் நான் என்று என் அம்மா சொல்வார். எனக்கு கீழே மூன்று தம்பிகள் இருந்தாலும் என் மீது ஒரு தனி பாசம் என் அப்பாவுக்கு என்பதை நான் பலமுறை உணர்ந்ததுண்டு. என் இரண்டு வயதிலிருந்தே மாலையில்  அலுவலகத்திலிருந்து அப்பா எப்பொழுது வருவார் என்று வாசலிலேயே காத்திருப்பேனாம். அப்பாவும் பிஸ்கட் சாக்லேட் என்று ஏதாவது வாங்கி வருவாராம். அப்பா வந்ததும் அன்று நடந்ததெல்லாம் அவரிடம் சொல்லிவிட்டே அவரை உடை மாற்ற விடுவேனாம்! நான்கு வயது வரை வெளியில் சென்றால் அப்பாவை என்னைத் தூக்கி வரச் சொல்லி அடம் செய்வேனாம்! நான் படிக்கும் நாட்களில் எனக்கு கணக்கில் சந்தேகம் வந்தால்(எனக்கு கணக்கு வராத பாடம்!) பொறுமையாக சொல்லித் தருவார். எனக்கு கல்லூரி சென்று படிக்க ஆசை இருந்தும் அப்பாவிற்கு இஷ்டமில்லாததால் அனுப்...

1.கைக்கடிகாரம்

படம்
அப்பாவின் முத்தான பத்து.. அப்பா அந்த நாளைய சாவி கொடுக்கும் கைக்கடிகாரம்தான் கட்டுவார். நான் வெளிநாடு சென்று வந்தபோது ஒரு கைக்கடிகாரம் வாங்கி வந்து கொடுத்தேன். ஆசையாகக் கட்டிக் கொண்டார். அதில் ஸெல் ( cell) தீர்ந்ததும்...எனக்கு இதெல்லாம் சரிவராது. தினமும் கடிகாரத்துக்கு கீ கொடுப்பதுதான் எனக்கு பிடிக்கிறது என்றாரே பார்க்கணும்! நேரம் தவறாத என் அப்பா எங்கு சென்றாலும் சரியான நேரத்துக்கு செல்வார்.

2.மூக்கு கண்ணாடி

படம்
  2.மூக்கு கண்ணாடி படிக்கும்போது மட்டுமே கண்ணாடி போடும் என் அப்பா படித்து முடித்ததும் அந்தக் கண்ணாடியை துடைத்து  அதன் கூட்டில் வைத்து அதை அதற்கான இடத்தில் வைப்பதை தவற மாட்டார். கண்ணைப் பாதுகாப்பது போல் கண் பார்வைக்கு அவசியமான கண்ணாடியையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பார் என் அப்பா.  அவ்வப்போது நான் கண்ணாடியை எங்காவது வைத்து விட்டுத் தேடும்போது அப்பா நினைவு வரும்! 

3.பேன்ட்

படம்
என் அப்பா எப்பொழுதும் வேட்டிதான் கட்டுவார். ஒரு வங்கி அதிகாரியாக இருந்தும் அப்பா பேண்ட் போட்டதில்லை. கல்யாணத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்குக் கூட வேட்டி கட்டியவர் எங்கப்பாவாகத்தான் இருக்கும்! தனக்கு வேட்டிதான் வசதி என்பார்.  வெள்ளை வெளேர் பாலிஸ்டர்வேஷ்டியில் மிடுக்காகத் தெரிவார் என் அப்பா.அலுவலக மீட்டிங்குகளுக்கும் வேட்டிதான் அணிந்து செல்வார்! ...அப்பா பேண்ட்டில் உன்னைப் பார்க்க ஆசையா இருக்கு...என்றால், ...எனக்கு ஆசை இல்லையே பேண்ட் போட...என்று சிரிப்பார்!  'வேட்டிதான் பாரம்பரிய உடை. அதுதான் ஆண்களின் அழகான உடை' என்பது என் அப்பாவின் மாற்ற முடியாத கருத்து!

4.ஷர்ட்

படம்
  அப்பா..நீ போட்ட சட்டைகளில் கட்டத்தையோ,கோடுகளையோநான் ஒருநாளும் கண்டதில்லையே! முழுக்கை சட்டையும் நீ அணிந்ததில்லை! ரெடிமேட் சட்டைகளுக்கும் தடா! உனக்குப் பிடித்த வண்ணங்களில் துணி வாங்கிக் கொடுத்து தைத்த சட்டைகள்தான் உன்னை கம்பீரமாக தெரிய வைத்தன!என் அன்பு அப்பாவே! உனக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

5.காமிரா

படம்
...அப்பா அப்படியே இரு. ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறேன்... என்றால்,... கொஞ்சம் இருடி! தலை வாரி, பவுடர் போட்டு, விபூதி இட்டு வருகிறேன்...என்று சோம்பல்படாமல் அலங்காரம் செய்து கொண்டு போஸ் கொடுப்பதை என்னால் மறக்க முடியவில்லையே அப்பா.  உன்னைப் பார்க்க ஆசை வரும்போதெல்லாம்  அந்த புகைப்படங்களைத்தான் பார்க்கிறேன்.

6.கைப்பை

படம்
  என் அப்பா அலுவலகம் செல்லும் வரை ஒரு கைப்பை எடுத்துச் செல்வார். அதில்தான் அலுவலக விஷயங்கள் பர்ஸ் மதிய சாப்பாடு அத்தனையும் அழகாக எடுத்துச் செல்வார். ஓய்வு பெற்ற பின்பும் தனக்கு வேண்டிய முக்கியமான ஃபைல்களை அதில்தான் வைத்திருந்தார்.  அப்பாவின் அந்த ஒழுங்கும், சுத்தமும், எதையும் அதனதன் இடத்தில் சரியானபடி வைக்கும் குணமும் எனக்கு ஆச்சரியம் தரும் விஷயங்கள்!

7.பர்ஸ்

படம்
எனக்கு தெரிந்து என் அப்பா மூன்றோ அல்லது நான்கு பர்ஸ்தான் உபயோகித்திருப்பார் என நினைக்கிறேன். எளிதில் பர்ஸை மாற்ற மாட்டார். ஒரு வசதியான உறுதியான பர்ஸைத்தான் வாங்குவார்! அதில் ரூபாய் நோட்டுக்கள் சில்லறைகளைத் தனித்தனியாக எளிதில் எடுக்கும்படி வைத்துக் கொள்வார். பல நேரம் வேட்டியை கட்டி சொருகும் இடத்தில் பர்ஸை சுற்றி அதை இறுக்கமாக இடுப்பில் சொருகிக் கொண்டு மேலே சட்டை போடுவதால் எளிதில் கீழே விழாது..யாரும் பர்ஸைத் திருடவும் முடியாது என்பார்! அப்பாவின் திறமைகள் இப்படி பலப்பல!

8.கடிகாரம்

படம்
தினமும் காலை அலாரம் வைத்திருந்தாலும் அப்பா அதற்கு முன்பே எழுந்து விடுவார். பரீட்சை நேரங்களில் காலை நான்கு மணிக்கு அப்பா அலாரம் வைத்து எழுப்ப, அம்மா தேநீருடன் நின்றிருப்பார்.  அன்று ஆரம்பித்த இந்த விடிகாலை எழும் பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. மிக்க நன்றி அப்பா!

9. சுத்தியல்

படம்
  அப்பா சில ஆயுதங்களை மிக பத்திரமாக எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருப்பார்.கத்தி கத்தரிக்கோல் சுத்தியல் ஆணி போன்ற எல்லா ஆயுதங்களும் அப்பா வசம் உண்டு! எதில் கோளாறு வந்தாலும் அதை தன் ஆயுதங்களை வைத்தே சரி செய்யும் திறமை அப்பாவுக்கு உண்டு! நல நேரங்களில் ஒழுகும் குழாயையோ, சரியாக எரியாத அடுப்பையோ மிக சுலபமாக அப்பா சரி செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன். என் அப்பாவின் திறமை யாருக்கு உண்டு என்று இறுமாந்த தருணங்கள் அவை!

10.பரிசு..கிஃப்ட்

படம்
  ஒருமுறை அப்பாவுக்கு...அப்பா இன்னிக்கு தந்தையர் தினம். இந்தா உனக்கு கிஃப்ட்...என்று ஒரு வேட்டி சட்டை கொடுத்து நமஸ்கரித்தேன். அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி...அட அப்பாக்கள் தினமெல்லாம் உண்டா? எனக்கு தெரியாதே...என்றவர்,  ...எனக்கு நீயே ஒரு கிஃப்ட்தான். தீர்க்காயுசா இரு.. என்றவர் உடனே வேட்டியைப்  பிரித்து கட்டிக் கொண்டு சட்டையைப் போட்டுக் காட்டினார். அதற்கடுத்த வருடம் தந்தையர் தினத்துக்கு முன்பே அப்பா மறைந்து விட்டார். 

இசை

படம்
இசையில் மயங்காத மனிதரும் உண்டோ? தன்னையே மறக்கச் செய்வது இசை! இதழ்களின் இனிமையான உச்சரிப்பு  இசை! மனம் முழுதும்  நிறைந்து இன்பம் தரும்  இசை! தாலாட்டில் குழந்தையை மயங்க வைக்கும் இசை! பிறப்பு முதல் இறப்பு வரை வி தவிதமான இசை! இறைவன் படைத்த அதியங்களில் ஒன்று  இசை!

11.கடிதம்

படம்
அப்பாவுக்கு ஒரு கடிதம் அப்பா..உங்கள் அன்பு கடல் போன்றது.. வெளியே தெரியாது ஆனால் ஆழம் அதிகம். அப்பா..உங்கள் அன்பை விட சிறந்த அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை!. அப்பா..உங்களுக்கும், கடவுளுக்கும் சின்ன வேறுபாடு தான் கண்ணுக்கு தெரியாதவர் கடவுள். எனக்கு கடவுளாய் இருந்தவர் நீங்கள்! உங்கள் தோள்கள் எனக்கு ஒரு காலத்தில் விலை மதிப்பற்ற சிம்மாசனம்..உங்கள் மடி விலை உயர்ந்த பட்டு மெத்தை! அப்பா..உங்கள் அன்பை மிஞ்சும் அளவு வேறு எந்த அன்பும் இந்த உலகில் இல்லை! அப்பா..உங்களை வணங்குகிறேன்..உங்கள் ஆசியை வேண்டு கிறேன்..என்றும் எனக்கு துணையாக இருக்க இறைஞ்சுகிறேன்!

அந்த நாள் நினைவுகள்

படம்
மரத்தடியில் பாடம் படித்தோம்! அந்த நாள் நினைவுகள் எத்தனை..எத்தனை! சேலத்தில் முதல் வகுப்பு சேர்ந்து சில மாதங்களில் என் அப்பாவுக்கு சென்னை மாறுதல். நான் முதல் வகுப்பில்  நன்கு படித்ததால் இரண்டாம் வகுப்பு என்று அந்த தலைமை ஆசிரியர் எழுதிக் கொடுத்ததால் நான் சென்னையில் நுங்கம்பாக்கம் அரசு துவக்கப் பள்ளியில் சேர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அது பெண்களும் பையன்களும் இணைந்து படித்த பள்ளி. அறுபதுகளில் பெண் ஆசிரியைகள் மிகக் குறைவு. ஆண் ஆசிரியர்களே அதிகம். அப்பொழுதெல்லாம் எல்லா வகுப்பிலும் ஆசிரியர்கள் சரியாக படிக்கா விட்டாலோ, மதிப்பெண் வாங்கா விட்டாலோ ஒரு குச்சியால் அடிப்பதுண்டு. மாணவிகளை விட மாணவர்கள்தான் நிறைய அடி வாங்குவதோடு, சிவந்த அவர்களின் கைகளைப் பார்த்து எங்களுக்கே பாவமாக இருக்கும். 'என் பிள்ளையை ஏன் அடித்தீர்கள்?' என்று ஆசிரியர்களுடன் சண்டை போட்ட பெற்றோரும் உண்டு! நான்காம் வகுப்பு படித்தபோது சில பையன்களுடன் நாங்கள் பெண்கள் நட்பாகப் பழகிய துண்டு. ஒரு பையன் அவன் அப்பா ஏதோ நெருப்புப் பெட்டி மேல் ஒட்டும் அழகான கலர்ப் படங்களை தயாரிப்பதாக சொல்லி, எனக்கு மட்டும் தருவதை பல பெண்கள் ...

வார இறுதி கதை..

படம்
  அரவிந்த் காதலிக்கிறான்.. அவளும் கோபமா இருக்காளே..அம்மாவும் கோபமா இருக்காங்களே..இப்ப என்ன செய்யலாம்? அரவிந்துக்கு எதுவும் புரிய வில்லை. அரவிந்த் அவன் பெற்றோருடன் தாம்பரத்தில் இருக்கிறான். ஒரு வெளி நாட்டு தகவல் தொழில்நுட்பக் கம்பெனியில் நல்ல வேலை. அடிக்கடி வேலை விஷயமாக வெளிநாட்டுப் பயணம் செல்வான். அப்பா ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரி. அவனுக்கு ஒரே அக்கா அனிதா. இரண்டு வயதே பெரியவள். திருமணமாகி மைலாப்பூரில் கணவருடன் வாசம். நேற்று ஞாயிற்றுக் கிழமை. அனிதா வீட்டுக்கு வந்திருந்தாள். எப்பொழுதும் போல் அம்மாவும் அனிதாவும் அரவிந்தின் கல்யாணம் பற்றி பேச ஆரம்பித்தார்கள். அனிதா ஜாதகம் சேர்ந்திருப்பதாகப் பல புகைப்படங்களைக் காட்டினாள். நல்ல வேலை, அழகு, நல்ல பணவசதி இருப்பவர்கள், நிறைய சீர் செனத்தி செய்பவர்கள் என்று சில பெண்களை சொல்லி பெண் பார்க்க போகலாமா என்றாள். அரவிந்த் எதிலும் பிடி கொடுக்காமல் பேசினான். ...என்னடா அரவிந்த் பெண் எப்படிதான் இருக்கணும்னு நினைக்கிறாய்?.z அம்மா. ...இத்தனை ஃபோட்டோவில் யாரையுமே பிடிக்கலையா?...கேட்டது அனிதா. ...அவனுக்கு யாரையாவது பிடிச்சிருக்கோ என்னவோ? அதை நீங்க ரெண்டு பேர...

என் இனிய தோழி!

படம்
நாம் எங்கு சென்றாலும்,எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் 'அப்பாடா' என்று நம் வீட்டில் வந்து படுக்கும் சுகம் இருக்கிறதே, அதற்கு இணையே கிடையாது! எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும், வசதிக் குறைவுகள் இருந்தாலும் அது நம் சொந்த வீடு என்கிறபோது அவை காணாமல் போய் ஒரு நிம்மதி தோன்றுவதை எவரும் உணரலாம். சொர்க்கமே என்றாலும் நம்மூர் மட்டுமல்ல நம் வீட்டைப் போலவும் வராது! வங்கி அதிகாரியாக இருந்த என் கணவருடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றல்;  பல ஊர்களில், மாநிலங்களில்  வாசம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி வீடு! நமக்கு வேண்டியபடி எந்த இடமும் இருக்காது. ஒரு வீட்டை சரி செய்வதற்குள் அடுத்த மாறுதல் வந்துவிடும். பணிக்குச் செல்லாத இல்லத்தரசியாக குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் படிப்பு, வீட்டு வேலைகள் என்று காலம் இறக்கை கட்டிப் பறந்த நாட்கள் அவை! ஆனாலும் சொந்த வீடு ஆசை மட்டும் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டிருந்தது. எனக்கு சின்ன வயதில் இருந்தே ஊஞ்சலில் ஆடப் பிடிக்கும். கும்பகோணத்தில் என் தாத்தாவின் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ஊஞ்சலில் ஆட எங்களுக்குள் (என்னுடைய மாமா, பெரிமா, சித்தி குழந்தைகளுடன் )...

இறக்கை

படம்
வானில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏங்குகிறேன் எனக்கு அதுபோல் சுதந்தரமாக பறக்க இறக்கை இல்லையே என்று!