7.பர்ஸ்
எனக்கு தெரிந்து என் அப்பா மூன்றோ அல்லது நான்கு பர்ஸ்தான் உபயோகித்திருப்பார் என நினைக்கிறேன். எளிதில் பர்ஸை மாற்ற மாட்டார். ஒரு வசதியான உறுதியான பர்ஸைத்தான் வாங்குவார்! அதில் ரூபாய் நோட்டுக்கள் சில்லறைகளைத் தனித்தனியாக எளிதில் எடுக்கும்படி வைத்துக் கொள்வார். பல நேரம் வேட்டியை கட்டி சொருகும் இடத்தில் பர்ஸை சுற்றி அதை இறுக்கமாக இடுப்பில் சொருகிக் கொண்டு மேலே சட்டை போடுவதால் எளிதில் கீழே விழாது..யாரும் பர்ஸைத் திருடவும் முடியாது என்பார்!
அப்பாவின் திறமைகள் இப்படி பலப்பல!
கருத்துகள்
கருத்துரையிடுக