10.பரிசு..கிஃப்ட்
ஒருமுறை அப்பாவுக்கு...அப்பா இன்னிக்கு தந்தையர் தினம்.
இந்தா உனக்கு கிஃப்ட்...என்று ஒரு வேட்டி சட்டை கொடுத்து நமஸ்கரித்தேன். அப்பாவுக்கு ஒரே மகிழ்ச்சி...அட அப்பாக்கள் தினமெல்லாம் உண்டா? எனக்கு தெரியாதே...என்றவர்,
...எனக்கு நீயே ஒரு கிஃப்ட்தான். தீர்க்காயுசா இரு..
என்றவர் உடனே வேட்டியைப்
பிரித்து கட்டிக் கொண்டு சட்டையைப் போட்டுக் காட்டினார். அதற்கடுத்த வருடம் தந்தையர் தினத்துக்கு முன்பே அப்பா மறைந்து விட்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக