3.பிள்ளை வரம் வேண்டி..(100வரிகதை)


இன்று வெள்ளிக்கிழமை. காலை கோவிலில் யாரோ செய்த அன்னதான சாப்பாடு கண்களைக் கிறங்க வைக்க அசந்து போய்த் தூங்கி விட்டார் இசக்கிமுத்து. 

மாலை நேரம் பக்தர் கூட்டம் அதிகம் வந்தால் சில்லறைகள் கூட சேரும் என்ற அவசரத்தில் தான் வழக்கமாக அமரும் இடம் நோக்கி வேகமாகச் சென்றார். அங்கு புதிதாக ஒரு கிழவி அழுக்கில்லாத புடவையுடன் அவர் இடத்தில்!

...ஏம்மா நீ பிச்சைக்கு புதுசா? நல்ல டிரஸ் போட்டிருக்க. எங்களுக்கு போட்டியா இங்கயும் வந்துட்டயா?...

...அட போப்பா. முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடி பிள்ளை வரம் வேண்டி இதே கோவில்ல 48 நாள் பிச்சை எடுத்த அனுபவம் இருக்குப்பா...

அதிர்ச்சியில் ஆடிப் போய்விட்டார் இசக்கிமுத்து!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே..1

என் இனிய தோழி!

அப்பா உங்களுக்காக...