9. சுத்தியல்
அப்பா சில ஆயுதங்களை மிக பத்திரமாக எங்கள் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருப்பார்.கத்தி கத்தரிக்கோல் சுத்தியல் ஆணி போன்ற எல்லா ஆயுதங்களும் அப்பா வசம் உண்டு! எதில் கோளாறு வந்தாலும் அதை தன் ஆயுதங்களை வைத்தே சரி செய்யும் திறமை அப்பாவுக்கு உண்டு! நல நேரங்களில் ஒழுகும் குழாயையோ, சரியாக எரியாத அடுப்பையோ மிக சுலபமாக அப்பா சரி செய்வதைப் பார்த்து வியந்திருக்கிறேன்.
என் அப்பாவின் திறமை யாருக்கு உண்டு என்று இறுமாந்த தருணங்கள் அவை!
கருத்துகள்
கருத்துரையிடுக