3.பேன்ட்



என் அப்பா எப்பொழுதும் வேட்டிதான் கட்டுவார். ஒரு வங்கி அதிகாரியாக இருந்தும் அப்பா பேண்ட் போட்டதில்லை. கல்யாணத்தில் மாப்பிள்ளை அழைப்பிற்குக் கூட வேட்டி கட்டியவர் எங்கப்பாவாகத்தான் இருக்கும்! தனக்கு வேட்டிதான் வசதி என்பார்.  வெள்ளை வெளேர் பாலிஸ்டர்வேஷ்டியில் மிடுக்காகத் தெரிவார் என் அப்பா.அலுவலக மீட்டிங்குகளுக்கும் வேட்டிதான் அணிந்து செல்வார்!

...அப்பா பேண்ட்டில் உன்னைப் பார்க்க ஆசையா இருக்கு...என்றால், ...எனக்கு ஆசை இல்லையே பேண்ட் போட...என்று சிரிப்பார்! 

'வேட்டிதான் பாரம்பரிய உடை. அதுதான் ஆண்களின் அழகான உடை' என்பது என் அப்பாவின் மாற்ற முடியாத கருத்து!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)