சுனிதா மாறினாள்!(28.2.'21)
வார இறுதி எழுத்து திருவிழா சுனிதா மாறினாள்! வீட்டுக்குள் நுழைந்தபோது வீடு மிகவும் சுத்தமாக இருந்ததை பார்த்து மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனார் லட்சுமியம்மாள். "என்ன வீடு இவ்வளவு சுத்தமா இருக்கே. வேற ஆள் வச்சுக்கிட்டயா பாப்பா" என்றபடியே வந்தவள் சுனிதா சொன்னதைக் கேட்டு "என் கண்ணு. நல்லாருக்கயா" என்றபடி குழந்தையை முத்தமிட்டாள். வாசுவுக்கு எப்போதும் டூர். மாதம் நான்கு நாள்தான் வீட்டு வாசம். சுனிதா வீட்டில் செல்லமாக வளர்ந்தவள். அவள் பெற்றோருக்கு செல்லப்பெண். வாசுவின் பெற்றோர் உடனிருந்தபோது அவன் அம்மா வீட்டை சுத்தமாக வைத்திருப்பார். சுனிதாவுக்கு எப்பொழுதும் சுத்தம் கிடையாது.அவள் வீட்டில் வேலைக்கு ஆட்கள் இருந்ததால் ஒரு சின்ன வேலைக்கு கூட அடுத்தவரை ஏவி வேலை பார்க்க சொல்பவள். எப்பொழுதும் மொபைலில் தோழிகளுடன் பேச்சு, டி.வி, தூக்கம் என்று எதிலும் ஆர்வமின்றி இருந்தாள். வாசு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் மாறுவதாக இல்லை. இரண்டு வருடத்தில் குழந்தை பிறந்தபோது வாசு குடும்பத்தினர் மகிழ்ச்சிக்கு அளவில்லை. இனியாவது அவள் மாறிவிடுவாள் என்று எதிர்பார்த்த வாசுவுக்கு கிடைத்தது ஏமாற்றம்...