இளைய சமுதாயமே எழுந்து வா!

 



இளைய சமுதாயமே எழுந்து வா!

இன்றைய பாரதம் சிறந்திட

எல்லா வகையிலும் உயர்ந்திட

வளமை பெற்று சீரடைய

ஞாலம் புகழ சீலம் பெற்றிட

வீரம் வெற்றி துணிவுடன்

நீதியும் பக்தியும் பெருகிட

உண்மையும் நன்மையும் 

உயர்வும் முயற்சியும் சிறந்திட

உழைப்பு உயர்வே கருத்தாக பாரதம் பாரில் சிறப்புற வலிமையான வளமான

இந்தியாவை உருவாக்க

மனபலமும் தோள் வலியும்

மனோதைரியமும் கொண்டு

இளைய சமுதாயமே!

வீறு கொண்டு திரண்டு வா!சிங்கமென எழுந்து வா! 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு