விசில் சத்தம்
அப்பாவிடம் அடம் பிடித்து வாங்கிய விசிலை விடாமல் ஊதி அப்பாவிடம் அடி வாங்கிய போது வயது ஐந்து!
பள்ளி செல்லும்போது விளையாட்டு வாத்யாரின் விசில் கேட்டு வரிசையில் நின்றது பத்து வயதில்!
கல்லூரி செல்ல பேருந்தில் ஏறும்போது நடத்துனர் விசில் அடிக்க படியில் நின்று பயணித்தது இருபது வயதில்!
அலுவலகம் செல்லும்போது சிற்றுந்தை நிறுத்த வேண்டிய இடத்தை அங்கிருந்த காவலாளி விசில் அடித்து காட்டியபோது வயது நாற்பது!
அலுவலக ஓய்வு பெற்று வீடு திரும்பியவரை விசில் ஊதி வரவேற்ற மூன்று வயதுப் பேரனை முத்தமிட்டபடி தூக்கியது அறுபது வயதில்!
அட..நாளை முதல் அந்தக் காலனியை இரவில் விசிலடித்தபடி சுற்றி வர வேண்டியது அவர் வேலை!
கருத்துகள்
கருத்துரையிடுக