பாரதி யார்..
பாரதியின் கவிதைகளில் எனை மறந்தவள் நான். என் குழந்தைகளுக்கு நிறைய பாரதியார் பாடல்களை போட்டிக்காக சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவரது கவிதைகளில் என்னைக் கவர்ந்தவரிகள்... சாதிகள் இல்லையடி பாப்பா; - குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
சாதம் படைக்கவும் செய்திடுவோம்; தெய்வச் சாதி படைக்கவும் செய்திடுவோம்.
ஆணுக்கு பெண்ணிங்கே சரிநிகர் சமானமாக வாழ்வோமிந்த நாட்டிலே'
என் குழந்தைகள் பாரதியார் பாடல் போட்டிகளில் சேர்ந்து பரிசுகள் வாஙாகியதுண்டு.
எங்கள் வீட்டில் பாரதியின் படம் ஒன்று மாட்டியிருந்தோம். நாங்கள் மும்பை மாறிச் சென்றபோது என் பையன் தன் அறையில் அதை மாட்டி வைத்திருந்தான்.
என் பெண்ணின் தோழி இந்தி பேசுபவள் அவளிடம்..
இது யார் உங்க தாத்தாவா?..என்று கேட்க அவளும்..தாத்தா மாதிரி. அவர் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறார்..என்றாள் பெருமையுடன்! இப்பவும் பாரதி என்றவுடன் இந்த நினைவு வரத் தவறுவதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக