செவிலியர்க்கு நன்றி🙏🏻
ராகவன், அனிதாவின் ஒரே மகள் அனன்யா. சிறு வயது முதலே மிகவும் புத்திசாலி. பள்ளியில் படிக்கும்போது எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெறுவாள். அவளை மருத்துவராக்கும் ஆசை அவள் பெற்றோருக்கு.
அவள் அம்மாவுக்கு கர்ப்பப்பை நீக்கும் அறுவை சிகிச்சை நடந்தபோது அவள் வயது பத்து. மருத்துவமனை செல்லும் போதெல்லாம் அவளுக்கு மருத்துவர்களை விட செவிலியர்கள் சேவையே மிக பிடித்தது. அவர்களின் தன்னலமற்ற, அருவருப்பில் லாமல் செய்த செயல்கள் அவள் மனதில் தானும் ஒரு செவிலியராகும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி முதலிடம் பெற்றபோது அவளை மருத்துவப் படிப்பு படிக்க வற்புறுத்தியபோது அவள் செவிலியர் படிப்பில் இணைந்து படித்தாள். மருத்துவர்கள் ஒரு குறிப்பிட்ட துறையிலேயே திறமை பெறமுடியும். செவிலியர்கள் அனைத்து துறைகளைப் பற்றியும் அறிய முடியும்.
அவள் திறமை பளிச்சிட மிகப் பெரிய மருத்துவமனையில் செவிலியராகப் பணி புரிந்து சிறந்த செவிலியர் என்ற பெருமை பெற்றாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக