என்னுடைய முதல் பொய்
உன்னில் மயங்கினேன்!
என் அன்பே! காதல் கணவனே!
நீ பெண் பார்க்க வந்த அன்று என்னைப் பார்த்த முதல் பார்வையிலேயே நான் என்னை மறந்து சொக்கித்தான் போனேன்!
ஆனாலும் என் பெற்றோரும் உறவினரும் என் சம்மதம் கேட்டபோது..எனக்கு பொருத்தமில்லையோ என்று தோன்றுகிறது...என்று சொன்னதே என் முதல் பொய்! சொன்னதோடு, இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நீயே என் துணைவனாய் வர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொண்டேன்! அன்று மணமேடையில் காதலுடன் நீ பார்த்த அந்த பார்வை இன்றும் தொடர்வதில் நான் மயங்கிக் கிடக்கிறேன்!
கருத்துகள்
கருத்துரையிடுக