நாம் பேசும் ரகசியங்களையும் கிசுகிசுக்களையும் காது கொடுத்து கேட்கும் நம் வீட்டு சுவர் அதை எவரிடமும் சொல்லாமல் நம்மைக் காட்டிக் கொடுக்காமல் மௌனம் காக்கிறது!
அன்புக் கவிஞரே! தங்கள் உருவம் எளிது! பாடும் குரலோ இனிது! என்றும் எமது கண்களில் தெரியும் உங்கள் புன்னகையும் காதுகளிலும் ஒலிக்கும் தேன் அமுதக் குரலும் தங்கள் இனிய குணங்களால் எம் உள்ளத்தில் வாழ்கிறீர்! வாழ்க நீ பல்லாண்டு! உலகம் உள்ளவரை உன் பாடல்கள் வாழும்!
நிதியுதவி..(தந்தைமனம்) குமாரின் அப்பா ஒருபெரிய கம்பெனியில் உயர்பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர். அவரைப்பாராட்டிய கம்பெனி அவரதுமகனுக்கு வேலைதருவதாக சொல்லியும் தன்மகன் அவன்முயற்சிலேயே வேலைதேடிக் கொள்ளவேண்டும் என்றுகூறி மறுத்துவிட்டார். குமார் பலஇடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை. தினமும் காலைசாப்பிட்டு செல்பவன் இரவுதான் வீடுவருவான். ..உன் பிள்ளை ஊரை சுற்றுவதைவிட்டு கொரோனாவை வாங்கிவரப் போகிறான்பார்..என்பார் மனைவியிடம். அன்று மாலை இரண்டு இளைஞர்கள் கையில் ஏதோ நோட்டுடன்வர, அவர்கள் ஒரு நோட்டீஸ் கொடுத்து கொரோனாவில் கஷ்டப்படும் ஏழை எளியவர்களுக்கு தாம் உதவுவதாகவும் முடிந்த தொகையைத் தரும்படியும் கேட்க, அதில் தலைவர்என்ற இடத்தில் குமாரின் பெயரைக்கண்டு ஒருகணம் திகைத்து அவர்களிடம் விபரம் கேட்டார். அவர்கள்...இவர்தான் எங்களின் இந்தசேவைக்கு காரணம். இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்திருக்கிறோம். உங்களால் முடிந்தது கொடுங்கள்..என்றனர். பிள்ளையின் நல்லெண்ணத்தை அறிந்து அவனைத்தவறாக எண்ணியதற்கு மன்னிப்பாக ஒருலட்சம்ரூபாய் கொடுத்தார்.இரவு மகனைப் பாராட்...
பசிக்கு உணவு சாப்பிடும்போது அதன் ருசியை நாம் உணர்வதில்லை.. பசியில்லாமல் சாப்பிடும்போது அது ருசியாக இருந்தாலும் சாப்பிட முடிவதில்லை. ****** உணவு உடை இருப்பிடம் தந்து நம்மைக் காப்பாற்றும் இயற்கையை நாம் மாசுபடுத்துவது நம்மையே சிறிதுசிறிதாக அழித்துக் கொள்வது போல் என்பதை அறியவில்லையே நாம்..
கருத்துகள்
கருத்துரையிடுக