அப்படி இருந்தவ..இப்படி..!!
உடல் எடை கூடுவதும் குறைவதும் நம் கையில் இல்லை. எத்தனை வயதானாலும் ஒல்லியும் இல்லாமல் பருமனும் இல்லாமல் நடுத்தரமாக இருக்கும் உடல்வாகு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. உடல் எடை எப்படியிருந்தாலும் ஆரோக்கியமாக இருந்தால் அதுவே பெரிய அதிர்ஷ்டம் தான்!
நான் பிறந்தபோது கொழுக் மொழுக் என்று அழகாக இருந்ததாக எல்லோரும் சொல்வார்கள். எனக்கு கண் பட்டு விடுமென்று என்னை யாரையும் தூக்கிக் கொஞ்ச விட மாட்டாராம் என் அம்மா!
பள்ளியில் படிக்கும்போதும் நான் மிக ஒல்லியாகத தான் இருப்பேன். என்னைப் பார்ப்பவர்கள் 'நீ சாப்பிடுவாயா மாட்டாயா?' என்பார்கள்!
பத்தொன்பது வயதில் எனக்கு திருமணமான போது அத்தனை பேரும் கேட்ட கேள்வி...பெண் மிகவும் ஒல்லியாக இருக்கிறாளே..என்பதுதான்!
திருமணத்தன்று...
நிறைய சாப்பிட்டும் உடல் எடை ஏறவில்லை.
நாற்பது வயதுக்கு மேல் கொஞ்சம் பூசியமாதிரி ஆனேன். என்னையும் என் பெண்ணையும் பார்த்து பெண்ணை என் தங்கையா என்பார்கள். 48 வயதில் என் பேரனைத் தூக்கிப் போகும்போது 'உங்க குழந்தை ரொம்ப சுட்டி' என்றவர்கள் உண்டு!
என் ஐம்பது வயதில்...
55 வயதுக்கு மேல் குழந்தைகள் திருமணமாகி வெளியில் சென்றுவிட, வேலைகள் குறைந்து குண்டாகி விட்டேன். இப்பொழுது பழையபடி ஒல்லியாக மாட்டேனா என்ற ஆசை! அதற்காக சாப்பிடாமல் இருப்பதெல்லாம் கிடையாது!
ஆனால் இப்பொழுது பலரும் இந்த அளவில் இருப்பதால் யாரும் 'ஏன் குண்டாக இருக்கிறாய்?' என்று கேட்பதில்லை! ஆனால் மனசில் மட்டும் இன்னும் ஆசை இருக்கு பழையபடி ஒல்லியாக!!
கருத்துகள்
கருத்துரையிடுக