திகிலான தீபாவளி
சில தீபாவளிகளை என்றும் மறக்க முடியாது. என் பிள்ளைக்கு ஆறு வயதிருக்கும்போது நாங்கள் பட்டாசு பட்டணமான சிவகாசியில் வாசம்! லார்ட் பட்டாசுகளைத் தயாரிப்பவர்கள் வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம்.
எங்களுக்கு பக்கத்து வீட்டில் பட்டாசுகளைத் தரத்தை ஆய்வு செய்யும் அதிகாரி குடியிருந்தார். பட்டாசு தயாரிப்பாளர்கள் அவர் வீட்டுக்கு விதவிதமாய் புதுமையான பட்டாசுகளைக் கொண்டு தருவார்கள். அத்தனை வாணங்கள், பட்டாசுகளையும் அவர் வெடிக்க நாங்கள் வேடிக்கை பார்த்தோம். காலனி முழுக்க ஒரே புகைமயம்.
நள்ளிரவில் என் மகனுக்கு திடீரென்று மூச்சுத் திணறல் வந்து, கண்கள் செருகி மயக்கமாகிவிட எங்களுக்கு பயமாகி விட்டது. அதிகப் புகையினால் அலர்ஜி ஆகிவிட்டது போலும்.
என் கணவர் எங்கள் வீட்டு சொந்தக்காரரிடம் டாக்டரை
விசாரிக்க, அவர் தானே தன் காரில் அவருக்கு தெரிந்த டாக்டரிடம் அழைத்துச் சென்று, கூடவே இருந்து, சரியானதும் அழைத்து வந்தார். காலத்தில் அவர் செய்த அந்த உதவியையும் அந்தங் தீபாவளியையும் என்றும் மறக்க முடியாது.
கருத்துகள்
கருத்துரையிடுக