இஞ்சி பேசுகிறேன்..

'காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு',இஞ்சிக்கு புறம் நஞ்சு" - என்றெல்லாம் பழமொழி என்னைப் பற்றி  உண்டு. 

என்னை இடிப்பர்..பொடிப்பர்!

நசுக்குவர்..நறுக்குவர்!

நீரில் கொதிப்பேன்!

அம்மியில் நசுக்கப் படுவேன்!


உடல் நலனுக்கு மருந்தாவேன்..

விருந்தில் ஊறுகாயாவேன்!

என்னில் காரம் உண்டு..

நலல சத்தும் உண்டு!


உடலைக் காக்கும் கஷாயம்!

நாவிற்கு ருசியாம் துவையல்!

என்னைப் பற்றி சொல்ல

எத்தனையோ உண்டு!


மந்தியிலிருந்து பிறந்த மனிதர்கள் சொல்வதோ

..இஞ்சி தின்ற குரங்கு!

ஏன் இந்தச் சொலவடை?

இன்றுவரை அறியேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு