மண்டைக்குள் மசாலா
மசாலா என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்கள் கலந்தது என்பது பொருள். சமையலில் சேர்க்கும் மசாலா பொடியில் மிளகு, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பட்டை, ஜாதிக்காய் போன்ற வாசனைப் பொருட்கள் பொடிசெய்து சேர்க்கப் படுகின்றன.அது அளவாக சேர்க்கப் படும்போது உணவு சிறப்பான மணமும் , சுவையும் பெறுகிறது.
மனிதர்களை 'உனக்கு மண்டையில் மசாலா இருக்கா?' என்று கேட்பதுண்டு! அதன் பொருள் அறிவு, புத்திக்கூர்மை, தெளிவான சிந்தனை, சமயோசித புத்தி, சரியான யோசனை, முடிவெடுக்கும் திறன் ஆகிய பண்புகள் தலையின் உள்ளிருக்கும் மூளையின் இயல்புகளாகக் கூறப்படுகிறது.
அதனாலேயே அறிவுள்ளவர்களை 'மண்டையில் நிறைய மசாலா இருக்கு' என்றும், முட்டாள்தனமாக நடப்பவர்களுக்கு மண்டையில் மசாலா இல்லை என்றும் ! சொல்லும் வழக்கம் ஏற்பட்டது!
கருத்துகள்
கருத்துரையிடுக