மீண்டும் அம்மா மடியில்..

 

என் குழந்தைப் பருவத்திற்கு சென்று அம்மாவின் இடுப்பில் அமர்ந்து அந்த சுகத்தை அனுபவிக்க வேண்டும்! என் அம்மா பாடும் தாலாட்டு பாடலில் கண் மூடித் தூங்க வேண்டும்! அம்மா மடியில் படுத்து பாலருந்த வேண்டும்! என் இரவில் அம்மாவின் புடவை தலைப்பைப் பிடித்துக் கொண்டு கதை கேட்க வேண்டும்! அம்மாவுடன் இருக்கும் நேரத்தை அதிகமாக்கிக் கொள்ள அம்மா தரும் பிடி சாதத்தை வாயில் வைத்துக் கொண்டு அம்மா கோபித்தாலும் மெதுவாக சாப்பிட வேண்டும்! அம்மாவை விட்டுப் பிரியாமல் அவளையே சுற்றி வர வேண்டும்! அவள் கட்டியணைத்து கொஞ்சி முத்தமிடவே அடிக்கடி அழ வேண்டும்!அம்மா சொல்லும் கதைகளை விழி விரியக் கேட்கவேண்டும்!  நான் அறியாத அந்த நாட்களுக்கு சென்று அம்மாவுடன் மீண்டும் குழந்தையாக நான் வாழ்ந்த நாட்களை அனுபவிக்க வேண்டும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு