கண்ணே! கண்மணியே!
கண்ணே! கண்மணியே!
உன் அழகு என்னை பெருமைப் பட வைக்கிறது!
நீ தூங்கும்போது அழகாக யாரைப் பார்த்து சிரிக்கிறாய்!
திடீரென்று அழுவது போல் விசிக்கிறாய்!
அரைக் கண்ணைத் திறந்து மூடுகிறாய்!
பால் குடிப்பது போல் நாக்கை சப்புக் கொட்டுகிறாய்!
உன்னை ரசித்துக் கொண்டிருந்த என்னை என் அம்மா கோபித்தார்.
..குழந்தை தூங்கும்போது ரசித்தால் கண்படும்..என்று!
கருத்துகள்
கருத்துரையிடுக