புகைப்படங்கள்

என் குழந்தைகள் இப்போது இளைஞர்களாக இருக்கிறார்கள். அவர்களை சின்னஞ்சிறு குழந்தைகளாகக் கற்பனை செய்வது மிகக்கடினம்! 

என்மகனும் மகளும்  நான் அண்ணாந்து பார்க்குமளவு உயர்ந்து விட்டார்கள்! ஆனால் நான் அவர்களை இன்னும் அன்றைய  குழந்தைகளாகத்தான் பார்க்கிறேன்! அவர்கள் வளர்ந்து விட்டதாக எனக்கு தோன்றவில்லை!

அவர்களுடன் இனி நான் தாலாட்டவோ சாதம் ஊட்டவோ, கண்ணாமூச்சி விளையாடவோ, கட்டியணைத்து தூங்கவோ முடியாது. அவற்றை நினைவில் கொண்டுவர அவர்களின் குழந்தைப் பருவ புகைப் படங்களைப் பார்க்கிறேன். என் கண்கள் கசிந்து பாசத்தில் அந்தக் குட்டி உருவங்களைத் தடவிப் பார்க்கிறேன். 

அவர்கள் தவழ்ந்ததும் நடந்ததும் என்னைக் கட்டியணைத்து முத்தமிட்டு விளையாடியதையும் புகைப்படங்களில் காணும்போது என்மனம் மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறது. 

அம்மாக்களே, சிறியவர்களாக இருக்கும்போதே உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை அதிகம் செலவழியுங்கள்!அவர்களுக்கு நூறு முத்தங்கள் தந்து அன்பைக்காட்டுங்கள்! நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களோடு பேசுங்கள்..விளையாடுங்கள்! கண்டிப்பாக அவற்றை புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் பின்னாளில் கண்டு மகிழ.. சந்தோஷப்பட..!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உங்க ஊர் ஸ்பெஷல்

தந்தை மனம்(100வரிக்கதை)

ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே..(2)