சுற்றுலா செல்வோம் (புதிது)

சுற்றுலா செல்லும்போது கிடைக்கும் அனுபவங்கள் நமக்கு பல படிப்பினைகளைத் தரும்.  மனமகிழ்ச்சிக்காவும், இன்பப் பொழுது போக்கிற்காகவும்,  மற்றொரு இடத்திற்குச் சென்று அங்குள்ள சிறப்புகளைக் கண்டு மகிழ்வதும், பலருடன் இணைந்து பேசிப் பழகுவதும் சுற்றுலாவின் சிறப்பு. 

சுற்றுலா எனும் சொல் உருவானது எப்படி? டூர்(tour) ‘ என்ற சொல்‘TORNUS எனும் இலத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கூறப்படுகிறது. டோர்னஸ் என்றால் சக்கரம். இச்சொல் சுற்றி வருவதைக் குறிப்பதால் சுற்றுலா ஆகியது! முன்பு போலின்றி இந்நாளில் சுற்றுலா செல்வது மிக எளிதாகும் பொருட்டு அரசாங்கம் பல வசதிகளை செய்து தருகிறது. 

எனக்கு சுற்றுலா செல்வதிலும் பல இடங்களைக் கண்டு ரசித்து அவற்றை எழுத்தில் வடிப்பதும் மிகவும் பிடித்த விஷயம்!  கொரோனாவிற்கு முன்பு லண்டனில் என் பிள்ளை வீடு சென்று ஸ்காட்லாண்ட் செல்வதாக இருந்து போக முடியவில்லை! 

இப்பொழுது நிலைமை ஓரளவு சரியானதால் 'இந்தியாவின் ஸ்காட்லாந்து' எனப் பெருமை பெற்ற கூர்கைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)