மறக்க முடியாத நினைவுகள்..
பெண் பார்க்க வந்து மண்ணை நான் பார்க்கும்போது நீ என்னையும், விண்ணை நீ பார்க்கும்போது நான் உன்னையும் ரகசியமாகப் பார்த்ததை மறக்க முடியுமா..!
உன் முதல் ஸ்பரிசம், முதல் முத்தம், முதல் வார்த்தைகளை மறக்க முடியுமா..!
நாம் முதலில் பார்த்த திரைப்படம், நீ வாங்கித் தந்த முதல் புடவை, நகை இவற்றை மறக்க முடியுமா..!
உன் வாரிசுகளை என் கையில் முதன் முதலாக தூக்கி உச்சி முகர்ந்ததை மறக்க முடியுமா..!
இன்றும் நிலவு தூங்கும் நேரம் என்னைத் தூங்க விடாமல் நீ செய்யும் குறும்புகளில் நான் மயங்கிப் போவதை மறுக்கவே முடியாது..!!
கருத்துகள்
கருத்துரையிடுக