அழுது கொண்டே சிரித்தாள்..


அழுது கொண்டே சிரித்தாள்..

சுமதி ரமேஷுக்கு ஒரே குழந்தை சஞ்சய். ஆறு மாதம் ஆகிறது. ரமேஷ் அவன் அம்மா சொல்வதை மீறி எதுவும் செய்ய மாட்டான். அதில் சுமதிக்கு கொஞ்சம் வருத்தம் உண்டு.

சுமதி 'என் அம்மாவுக்கு உடம்பு முடியலயாம். இரண்டு நாள் எங்க வீட்டுக்கு போய் இருந்து விட்டு வந்து விடுகிறேன்' என்றாள். 'அதெல்லாம் எனக்கு தெரியாது. ரமேஷ் அனுப்பினால் போ' என்றாள்.

உடன் ஃபோனில் ரமேஷிடம் கேட்க, அவன் 'அம்மா அனுமதித்தால் போ' என்று சொன்னான். பெற்ற தாயைப் பார்க்கக் கூட போகமுடியவில்லையே என்ற வருத்தம் அழுகையாக வர, அறைக்கு வந்தவள் தாங்க முடியாமல் அழுது விட்டாள். அப்போது சஞ்சய் பசியினால் அழ, அவனை தூக்கிப் பாலைக் கொடுத்தாள். பசி அடங்கிய பிள்ளை அவளைப் பார்த்து அவள் முகத்தைத் தடவி சிரித்தது. அந்த அழுகையிலும் தன் பிள்ளையின் பிஞ்சு முகத்தைப் பார்த்து சிரித்தாள் அந்தத் தாய்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு