இன்னிசையரசி
இசையரசி திருமதி M.S.சுப்புலட்சுமி அவர்கள் என் வீட்டின் அண்டை வீட்டில் வசித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். எனக்கு அவரையும் பிடிக்கும்..அவரது பாட்டையும் மிகவும் பிடிக்கும். அவர் பாடல்களை மெய்மறந்து ரசித்துக் கேட்பேன்.எனக்கு பாடத் தெரியுமாதலால் அவரது பல பாடல்களை எழுதி வைத்து மானசீகமாக அவரை வணங்கிப் பாடுவேன். குறையொன்றுமில்லை, ஸ்ரீரங்கபுர விஹாரா, வடவரையை மத்தாக்கி, பாவயாமி ரகுராமம் இவை எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். அவரை ஒருமுறை நேரில் பார்த்ததுண்டு. அவருடன் பேசவும், பாட்டு கற்றுக் கொள்ளவும் மிகவும் ஆசை. அவர் எனக்கு அடுத்த வீட்டில் இருந்திருந்தால் நானும் மேடைப் பாடகி ஆகியிருக்கலாமே என்ற ஆசை உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து அவரது பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததே இறையருள்தானே!
கருத்துகள்
கருத்துரையிடுக