விடியல் அழகு
கானம் பாடி விடியலை வரவேற்கும் பறவைகளின் இனிய இசை ஒலிகள்..!
மிடுக்கான சேவல்களின் ஒய்யார கொக்கரிப்பு..!
துள்ளி விளையாடும் அணில்கள் மரத்தின் மேலும் கீழும் ஓடி உல்லாசமாய் எழுப்பும் 'கீச்கீச்' ஒலி..!
கதிரவனின் கரங்கள் நீட்டிய செந்நிற ஆகாயம்..!
'இதோ வந்து விட்டேன் என்று முகம் காட்டும் ஆதவன்..!
இன்றும் இனி வரும் நாட்களும்
இனிமையாக இருக்க நாமும் சொல்வோம் விடியற்காலை வணக்கம்!
கருத்துகள்
கருத்துரையிடுக