முத்தமும் சத்தமும்
சங்கருக்கு ஒரு குறை. சாதனாவுக்கு தன்னிடம் காதல் இருக்கிறதா என்று. அவனை அணைப்பதில் ஆர்வம் இருந்தாலும் அவனை முத்தமிட அனுமதிப்பதில்லை.
திருமணத்திற்கு நாள் பார்த்து முடிவு செய்தாகி விட்டது.அன்று சாதனா..மாலை சந்திப்போம்.. என்றாள். சங்கர் வீட்டில் யாருமில்லாததால் அவளை தன் வீட்டுக்கே வரச் சொன்னான்.
அவன் கையைப் பிடித்து பேசிக் கொண்டிருந்தவளின் கையில் ஆசையில் சட்டென்று முத்தமிட்டான். அதைத் தடுக்காத சாதனாவும் அவனை முத்தமிட்டாள்.
..நீ ஏன் இத்தனை நாளாக முத்தமிட அனுமதிக்கவில்லை?..
முத்தமிட்டால் நாம் திருமணத்திற்கு முன்பு எல்லை மீறி விடுவோமென்று பயந்ததாகச் சொன்னபோது சங்கர் சிரித்து விட்டான்!
..காதலுக்கு முத்தமும் தேவை. கல்யாணத்திற்கு பிறகாவது முத்தமிட அனுமதிப்பாயா?..என்று அவன்
தலைசாய்த்து கேட்டபோது வெட்கத்தில் சாதனா முகம் சிவந்தாள்.
கருத்துகள்
கருத்துரையிடுக