அம்மி மிதித்து...
அம்மி என்றதும் நினைவில் வருவது திருமணத்தில் நடக்கும் அம்மி மிதிக்கும் சடங்கு. இந்துக்களின் திருமணத்தில் உள்ள ஒவ்வொரு சடங்கிற்கும் ஒவ்வொரு விதமான அர்த்தங்களுண்டு. அதில் ஒன்று அம்மி மிதிக்கும் சடங்கு.
மணமகனும் மணமகளும் அக்னியைச் சுற்றி வந்து பெண்ணின் வலதுகாலை மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி அணிவிப்பார்.
அதற்கு ஒரு பொருள் உண்டு.
வாழ்க்கையில் சுகமும், துக்கமும் மாறி மாறி வரும். அது போன்ற தருணங்களில் மனதில் எந்த சலனமுமின்றி கல் போல அசையாத, திடமான மன உறுதியைப் பெண்ணும், அவளை என்றும் கைவிடாத ஒழுக்கத்தை ஆணும் பெற்றிருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக