விளையாட்டு (ப.கதை).. ஊஞ்சல் (பு.கதை)
எனக்கு வீட்டில் ஊஞ்சல் போட்டு ஆடும் ஆசை உண்டு. என் கணவருக்கு வடக்கே மாற்றல் ஆனதுடன் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாறுதல். வாடகை வீடுகளில் ஊஞ்சல் போட வழியில்லை.
பத்து வருடங்களுக்கு முன் சொந்தவீடு வாங்கி ஊஞ்சல் போட, விடுமுறைகளில் என் பேரன் பேத்திகள் வந்து ஊஞ்சலாடி மகிழ்வார்கள்.
ஒருமுறை என் கணவரும், பேத்தியும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டே ஊஞ்சலாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று பெரிய சத்தம். பயத்துடன் நான் ஓடிவர ஊஞ்சல் ஒரு பக்கக்கம்பி அறுந்து இருவரும் கீழே விழுந்து பேத்தி ஒரே அழுகை. நல்ல வேளையாக சின்ன சிராய்ப்புகள் மட்டுமே.
பின் ஊஞ்சல் கம்பி மாட்டிய இடத்தில் ஆழமாக சுவரை உடைத்து நன்றாக மாட்டினோம் . நல்ல வேளையாக விழுந்த வேகத்தில் கை காலில் எலும்பு முறிவுகள் ஏற்படாமல் இருந்ததே என்று எண்ணிக் கொண்டோம். இப்பவும் ஊஞ்சல் ஆடும் போது இந்த நினைவு வரத் தவறுவதில்லை.
கருத்துகள்
கருத்துரையிடுக