பேத்தியின் (கதா)பாத்திரங்கள்..!
மூன்று வயதில் என் பேத்திக்கு பாத்திரம் வைத்து சமையல் செய்து விளையாடுவது ரொம்பப் பிடிக்கும்.
அவளாகவே அலமாரியிலிருந்து குட்டி கிண்ணம், ஸ்பூன், தட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டு அத்துடன் அவள் சொப்புகளையும் வைத்து சமையல் செய்து கூட என்னையும், என் கணவரையும் சாப்பிடக் கூப்பிடுவாள்!
எனக்கு வேலை இருப்பதாகச் சொன்னாலும் விட மாட்டாள்! ...பாட்டி நீயும் வந்து தாத்தாவோடு மம்மு சாப்பிடு...என்று வெறும் தட்டு கிண்ணம் இவற்றை வைத்துக் கொண்டு சாதம் போட்டு குழம்பு ஊற்றி சாப்பிட சொல்வாள். என் கணவர் ருசித்து ரசித்து சாப்பிடுவது போல் நடிப்பார்! நான் ஒரே தடவையில் எடுத்து சாப்பிட்டால்...மெதுவா ஒவ்வொரு பிடியா எடுத்து சாப்பிடு...என்பாள்!
...எனக்கு இன்னும் வேணும். பாத்திரத்தில் இல்லையே என்றால்... அவ்வளவுதான். மம்மு காலி ஆயிடுத்து. மறுபடி சாயந்திரம்தான்...என்றபடி எல்லா பாத்திரத்தையும் எடுத்து வைத்து விடுவாள்!
சொப்பு பாத்திரத்தில் சமைக்கும் அவளுக்கு நாங்கள் கதாபாத்திரங்கள்!
கருத்துகள்
கருத்துரையிடுக