வீடு

 



மகிழ்ச்சியும், மன நிறைவும்

கவலையும், துன்பமும்

ஏற்றமும், தாழ்வும் எல்லாம்

ஒன்றிணைந்த இடம் வீடு...

வீட்டில் இருக்கும் விதவிதமாய் பல அறைகள்..

அவற்றில் மணமும், சுவையும் நாளும் நிறைந்தது

சமையலறை..

அங்கு மட்டுமே பெண்களின் அதிகபட்ச உழைப்பு..

அங்குள்ள மாடத்தில் விதவிதமாய் பாத்திரங்கள்..

அவற்றில் உருவாகும் சமையலின் மணமும்,சுவையும்  தனிச்சிறப்பு..

வீட்டு மக்களின் ஆரோக்கியம் பெண்கள் கையில்...

அரைப்பதும் கரைப்பதும் இடிப்பதும் கிளறுவதும் அதன் பயனாய் சமையல் ருசிப்பதும்

அங்கு மட்டுமே..

கணவருக்கு பிடித்த  காரக் குழம்பும்,

தனயன் கேட்கும் குருமாவும் மகளின் விருப்பமான மைசூர்பாகும் கேட்டதும் தருமே அம்மாவின் அட்சய பாத்திரம்..

ஆனால் அம்மாவின் விருப்பத்தை கேட்பவர் உண்டோ! எவருமில்லை!

ஒவ்வொரு வீட்டின் சமையலறையும்

அம்மாக்களின், அக்காக்களின், தங்கைகளின், அண்ணிகளின், 

பாட்டிகளின், மருமகள்களின்

கண்ணீரை அறிந்திருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு