மகிழ்ச்சி தரும் புகைப்படங்கள்..

 புகைப் படங்கள் என்றும் நம்முடைய பழைய நாட்களை நினைவு படுத்தும். அறுபது வருடங்களுக்கு முன்பெல்லாம் வீட்டில் புகைப்படம் பெட்டி கிடையாது. ஸ்டூடியோக்களுக்கு சென்றுதான் புகைப்படம் எடுக்க வேண்டும். அப்படி எடுத்த புகைப்படங்கள் எல்லார் வீட்டு கூடத்தில் வரிசையாக மாட்டப் பட்டிருக்கும்! பெற்றோர், குழந்தைகள் (குப்புறப்படுத்த, தவழ்ந்த, உட்கார்ந்த, நின்ற!) படங்களோடு பெற்றோர்களின் கூடப் பிறந்த சகோதர, சகோதரிகளின் புகைப்படங்களும் வரிசையாக மாட்டப் பட்டிருக்கும்!

என் அம்மாவுக்கு புகைப்பட ஆசை அதிகம்! ஒவ்வொரு வருடமும் ஸ்டுடியோ சென்று குடும்ப புகைப்படம் எடுத்து அதைக் கண்ணாடி போட்டு மாட்டுவார்! எனக்கு குழந்தைகள் பிறந்தபின் அவர்களின் புகைப் படங்களும் மாட்டியிருநதார்!

..ஏன்மா இப்படி மாட்டி வைக்கிறாய்?..என்றால், 'உங்களைப் பார்க்கத் தோணும்போதெல்லாம் இவற்றைப் பார்த்து மகிழ்வேன்' என்பார்!

இப்போதோ கைபேசியில் அத்தனை புகைப்படங்களும் உள்ளது! உள்ளங்கையில் உலகம் மட்டுமா..நண்பர்கள், உற்றார், உறவினர்களும்  இருக்கிறார்கள்! இப்பவும் புகைப்படம் எடுக்கும் போதெல்லாம் அம்மா நினைவு வந்து கண்கள் கலங்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)