கோலங்கள்
சிக்குக் கோலத்தில்
புள்ளிகள் மினுக்கும்!
கைகள் போடும் கோலம்!
கற்பனையின் ஜாலம்!
நேர்கோட்டுக் கோலம்
நேர்த்தியைக் காட்டும்!
வண்ணக் கோலத்தின்
வனப்புகள் பலப்பல!
விதவிதமாய் உருவக் கோலங்கள்!
வித்தியாசமான அழகுக் கோலங்கள்!
ஆடும் மயிலும்
பாடும் குயிலும்
அழகாய்த் தெரியும்!
அற்புதம் புரியும்!
காலத்தின் கோலம்
அது வாழ்க்கை கோலம்!
வளைவுகள் இல்லா
வாழ்க்கை இல்லை!
கருத்துகள்
கருத்துரையிடுக