நாட்காட்டி சொன்ன அறிவுரை
சமையலறையில் வேலை மும்முரத்திலிருந்த என் காதில் ஒரு விசிப்பு சத்தம் கேட்க 'எங்கே'என்று தேடினேன்!
'நான்தான்'என்றது நாட்காட்டி, ஒற்றைத் தாளுடன்!
'ஏன் அழுகிறாய்?' என்றேன்.
'ஒரு வருடமாக நீ ஒவ்வொரு நாளும் என்னைக் கிழிக்கும் போது சத்தமின்றி அழுவேன். நாளையுடன் என் பணி முடிந்து மறைந்து விடுவேன். உன்னிடம் ஒன்று கேட்கவா?'
'கேள். தெரிந்தால் சொல்கிறேன்'.
'தினமும் தாளைக் கிழிக்கும்போது அதில் இருக்கும் செய்தியைப் படிப்பாயே. அதில் உனக்குப் பிடித்த செய்தியை சொல்ல முடியுமா?'
'நிச்சயமாக. கேட்டுக் கொள்'.
'சொல் சீக்கிரமாக. என் ஆயுள் இன்னும் ஐந்து மணி நேரமே'.
'ஒவ்வொரு நாளும் தூங்கி எழும்போது புதிதாகப் பிறப்பது நாள் மட்டுமல்ல. நீங்களும்தான். கடந்த காலத்தின் தேவையற்ற குப்பைகளை சுமந்து செல்ல நாம் ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல..இதுதான்'
'நன்று. என்றும் இதை மறக்காதே. சென்று வருகிறேன்' என்று விடை பெற்றது நாட்காட்டி!
கருத்துகள்
கருத்துரையிடுக