உன்னை சுற்றி என் சுற்றுலா

 


கண்ணே..கனியமுதே..

செல்லமே..மணிமுத்தே!

உன் சின்ன வாய் திறந்து ஒருபிடி சாதத்துடன் வீடு முழுதும் வலம் வருவாயே! 

வாயில் சாதத்துடன் கண்ணா மூச்சி விளையாட்டு வேறு! 

அறைக்குள் ஒளிவாய்!

கொல்லைப் பக்கம் ஓடுவாய்!

மாடிக்கு ஏறி விடுவாய்!

நானும் தெரியாத மாதிரி உன்னைப் பின் தொடர்ந்து வருவேன்!

வாயை இறுக மூடிக் கொண்டு வாசலுக்கும் தோட்டத்துமாக ஓடி  

உன்னை சுற்றிச் சுற்றி வந்த சுற்றுலாவை எப்படி மறப்பேன் 

என் தங்கமே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு