சங்கே முழங்கு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது கிடைத்த முதல் மங்கலப் பொருள் சங்கு. சங்கில் பலவகை உண்டு. வலம்புரி சங்கே மிக உயர்ந்தது. பிஞ்சுக் குழந்தைகளுக்கு பால் புகட்டும் பாலாடை சங்கு எனப்படும். ஆலயங்களில் பூஜை நேரத்தில் சங்கு ஒலி எழுப்புவர். இறைவனுக்கு சங்கினால் அபிஷேகம் செய்வது சிறப்பு. பகவான் கண்ணனின் கையில் இருப்பது பாஞ்சசைன்யம் எனும் சங்கு.வீடுகளில் சங்கிற்கு பூஜை செய்வது செல்வம் தரும். மக்கள் இறந்தபின் இறுதி யாத்திரையில் சங்கு ஊதுவதுண்டு. வாழ்வின் ஆரம்ப முதல் இறுதி வரை நம் வாழ்வில் சங்கிற்கு இடமுண்டு என்பதே அதன் சிறப்பாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக