அழகுக் கோலங்கள்..
மார்கழி என்றதும் நினைவுக்கு வருவது கோலம். கோலம் என்பதற்கு அழகு என்று பொருள். சூரியன் உதிக்குமுன் எழுந்து பசுஞ்சாணத்தால் வாசல் தெளித்து கோலமிடுவது வீட்டிற்கு ஐஸ்வர்யம் சேர்க்கும். கோலம் போடுவதால் மனம் உற்சாகம் பெறும். உடலுக்கு நல்ல தேகப் பயிற்சி.
தற்போதைய அவசர உலகத்தில் தினசரி கோலம் போடாவிட்டாலும், விசேஷங்கள், பண்டிகை நாட்களில் கோலம் போட வேண்டும்.
கோல இழைகளை வலப்புறமாக மட்டுமே இழுக்க வேண்டும். இடப்புறமாக இழுக்கக் கூடாது. கோலத்தை காலால் அழிக்கக் கூடாது. விசேஷ நாட்களில் மாக்கோலமிட்டு காவி பூசுவது சிவ சக்தி ஐக்யத்தை உணர்த்தும். வெண்மை – சிவன், சிவப்பு – காவி – சக்தி.
எறும்பு முதலிய ஜீவன்களிடம் நாம் பரிவு காட்ட வேண்டுமென்பதை உணர்த்தவே அரிசி மாவினால் கோலம் போடுகிறோம். பின்னல், சுழிக் கோலங்கள் வாழ்க்கை சுகம், துக்கம் இரண்டும் இணைந்தது என்பதை உணர்த்துகின்றன.
கோலப் பொடிகளின் நிறங்கள் ஒவ்வொன்றும் ஒரு குணத்தை வெளிப்படுத்துகின்றன.
மஞ்சள் – மங்கலம்; பச்சை – அன்பு; ஆரஞ்சு – தியாகம்; வெள்ளை – தூய்மை; சிவப்பு – வீரம்.
கருத்துகள்
கருத்துரையிடுக