புலரும் காலைப் பொழுது


அழகைப் பொழியும் அற்புத நீலவானம்..

அடிவானம் காட்டுது சிவப்பு வர்ணம்..

சில்லென வீசும் விடிகாலைக் காற்று..

கொல்லெனப் பூக்கும் புத்தம்புது மலர்கள்..

சிறகு விரிக்கும் சிட்டுப் பறவைகள்.. 

கொக்கரக்கோவெனக் கூவி எழுப்பும் சேவல்கள்..

உல்லாசமாய் உலவி வீசும் ஊதல் காற்று..

பொன் மேகத்தில் தோன்றும் காலைக் கதிரவன்.. 

விடியல் பொழுதை உற்சாகமாக்கி உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இனிய காலை வணக்கமும் வாழ்த்தும் சொல்வோம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு