மத்து

 

வெண்ணெய் எடுக்க மத்தால் தயிரைக் கடைந்து கொண்டிருந்தேன். என் செல்லப் பேரனுக்கு வெண்ணை என்றால் உயிர்! என் பின்னால் வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு..பாட்டி! எனக்கு வெண்ணெய் தரயா?..என்று மழலையில் கேட்ட  போது,..என் மனதை உன் பாசம் என்ற மத்தினால் கடைந்து மகிழ்ச்சி எனும் வெண்ணெய் தந்தாயே! உனக்கில்லாத வெண்ணையா? இந்தா சாப்பிடு...என்று வெண்ணையைத் தர அவன் அடைந்த சந்தோஷத்தில் என்னையே மறந்தேன்! அவனை அள்ளி அணைத்தேன்! முத்தமிட்டு மகிழ்ந்தேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு