பேத்தியின் சவாரி

 

...பாட்டி இங்க வந்து பார்..என்று கூப்பிட்ட பேத்தி அனுஷாவின் குரலுக்கு ..இதோ வரேன்..என்றபடியே தன் கைவேலையைப் பாதியில் நிறுத்தி விட்டு வந்தாள் சுமதி. 

...எதற்கு கூப்பிட்டாய்?..என்றவளிடம்,

 ..பாரு நான்தான் இந்த நாட்டின் அரசி. நான் யானை மேல சவாரி போறேன்! இந்தத் தாத்தா யானை ரொம்ப மெதுவா போகுது. கொஞ்சம் வேகமா போகச் சொல்லு...என்றாள் பேத்தி அனுஷா. 

..நீயே உன் தாத்தாவிடம் சொல்லேன்...என்ற சுமதியிடம்...தாத்தா நான் சொன்னா கேட்க மாட்டேங்கறார்! நீ வந்து சொன்னாதான் வேகமா போவாராம்...

சுமதி தன் கணவரிடம்...என்னங்க இதெல்லாம்..என்று சிரித்தபடி கேட்க, அனுஷா...பாட்டி நீதான் இந்த வீட்டுக்கு அரசியாம்! அதனால் தாத்தா நீ சொல்வதை மட்டும்தான் கேப்பாராம்...என்றாள்.

...இதோ பார்! இப்போ யானை வேகமா போகும்...என்றபடியே, ..தாத்தா யானையே, என் குட்டி ராணி கேட்டபடி வேகமா போ...என்று சொல்ல, தாத்தாவும்...என் இதய அரசியே! நீ சொன்னபடி வேகமா போறேன்...என்றார்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு