மாம்ஸ்ப்ரஸ்ஸோ..நீ வாழ்க..வளர்க..

கவிதை

*********


கண் விழித்தவுடன்

முகநூல் தரிசனம்!

சங்கேதச் சொல் மட்டும் 

சரியாகச் சொல்லி விட்டால்

அலிபாபா குகைபோலே 

அழகாக உட்புகலாம்!


#புத்தம்புது_பூமி_வேண்டுமென நித்தமுமே ஆசைப்படலாம்!

பயணச்சீட்டின்றி பயமின்றி 

புவிமுழுதும் உலாவரலாம்!


#சும்மா_இருக்காதே_நம்மனது!

அத்தனை மனிதர்களின் 

சுயவிபரம் அறியவும்

அற்பமாய் ஆசைப்படுமே!


தேசங்கள் கடந்து

நேசக்கரங்கள் நீட்டும்..!

நட்பாய் அறிமுகமாகி

உறவுகளாய் பரிணமிக்கும்..!

உலகை ஒருங்கிணைக்கும்

ஒற்றையடி பாதை!

#இதுவே_முகநூல்_உலகம்!


மாம்ஸ்ப்ரஸ்ஸோ என்றொரு தளமுண்டு!

மகத்தான திறமையுள்ள

மகளிர் பலப்பலவுண்டு..


சமையல் மேடை மட்டுமே 

சாஸ்வதமாய் நினைத்திருந்த

சகதர்மிணிகளுக்கு 

சகலகலைகளிலும்

போட்டிகள் வைத்து

பாராட்டி பரிசுகளும் தந்து... 

#நெஞ்சுக்குள்_பெய்திடும்_மாமழையாய் மகிழச் செய்வர்!


#தமிழுக்கு_அமுதென்று_பேர்

அந்தத் தமிழே எனக்கு 

ஆதாரமென அழகழகாய் அவர்களின் அனுபவங்கள்

ஆயிரம் கதை சொல்லும்!

வாசித்தோரின் விழி உயர்த்தி

..ஆஹா.இவளல்லவோ பெண்..

என்று ஆச்சரியமாய் பார்க்க வைக்கும் வித்யாசமான தளமிது!

அவர்கள் பிள்ளைகளின் வீட்டினரின் திறமைகளையும்

வெளிச்சம் போட்டு வெளிக் கொணரும் அற்புதத்  தளமிது!


இவளுக்கு என்ன தெரியுமென்று எக்காளம் பேசியவரிடம்

#வீழ்வேனென்று_நினைத்தாயோ என சவாலிட்டு...அவை

#பொய்யாய்_பழங்கதையாய்_கனவாய்_மெல்லப்_போனதுவே என்று அவர்களை விழிஉயர  வைத்த வித்யாச தளமிது!


சத்தியமாய் சொல்கிறேன்

மாம்ஸ்ப்ரஸ்ஸோவில் இணைந்திருந்தால் ஆடலாம்..பாடலாம்..

அழகழகாய்க் கோலமிட்டு

கதை கவிதை சொல்லிடலாம்.

எத்திசையும் புகழ் பெறலாம்

முத்திரையும் பதித்திடலாம்.

பரிசாகப் பணமும் பெற்றிடலாம்..

நானும் சம்பாதிக்கிறேன் என்று எவரிடமும்  இயம்பிடலாம்!

#பாருக்குள்ளே_நல்ல_நாடிதில்நன்றி..வணக்கம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5.காமிரா

என் இனிய தோழி!

உண்மை..துணிச்சல்(100வரி)