தேசியக் கொடி

 


இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடி  ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட இந்திய நாட்டின் கொடியாகும். நம் நாடு குடியரசு நாடான பின் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது.

துறவிகளைக் குறிக்கும் நிறமான காவி நிறம், ஆசைகளைத் துறப்பதைக் குறிப்பதாகும். நாட்டுத் தலைவர்கள், நம் நாட்டு நலனுக்காக தம் சேவையை அர்ப்பணிக்க வேண்டும் என்பதையும், வெண்மை நிறம்  நன்னடத்தையின் பாதைக்கு வழி காட்ட வேண்டும் என்பதையும், கீழுள்ள பச்சை நிறம், நம் நிலத்தில் வளரும்செடி கொடிகளை சார்ந்த நம் வாழ்வைக் குறிப்பதையும் , அசோகச் சக்கரம், நாட்டு மக்களுக்கு நியாய தருமத்தின் சிறப்பையும், அமைதியையும் எடுத்துக் காட்டுவதையும் உணர்த்துகிறது. 

வந்தே மாதரம்🙏🏻

ஜெய்ஹிந்த் 🙏🏻

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு