பனியில் ஒரு பயணம்
முதல் ஐரோப்பிய பயணம்..
முகமும் மனமும் மகிழ்ச்சியில் நடமிட..
குளிரும் பனியும் கும்மாள
மிடும் ஆல்ப்ஸ் மலையில் குதித்து விளையாடிய தருணம்!
பனிக்கட்டியைத் தொட்டுப் பார்த்தேன்!
பரவசத்துடன் பனி ம(லை)ழையில் நடந்தேன்!!
வெள்ளைப் பனியின் குளுகுளு விளையாட்டு!
சூடான தேநீர் அமிர்தம்..
உடலுக்கு தரும் சூடும் சுகமும்!
மரம் செடி கொடிகளில்
பூவைப் பார்த்ததுண்டு..
பனி மழையே பூவாய் சொரிந்ததை ரசித்துப் பார்த்தேன்!
பனி மாந்தரின் மழலைகளின் நண்பன்!
பனியைப் பந்தாக்கி எறிந்து விளையாடலாம்!
பனியில் பலகையில் பாங்காய் சறுக்கலாம்!
பனியைத் திரட்டி மனிதனையும்
உருவாக்கலாம்!
கால் முதல் தலைவரை கம்பளி ஆடைகளால் உடலை மூடி
கண் மட்டும் பார்க்க, அந்த வெள்ளை உலகம் நம்மை கனவில் மூழ்கச் செய்கிறது!
கருத்துகள்
கருத்துரையிடுக