பிரசவ நேரம்..
பத்து மாதம் சுமந்து பத்தியமெல்லாம் இருந்து
பிரசவ நேரத்தை எதிர்பார்த்து ஆவலாய் அனைவரும் காத்திருக்க...
வலியின்றி வீட்டிலேயே பனிக்குடம் உடைந்திட...
என் பெற்றோர் பயந்து அவசரமாய் மருத்துவமனை சென்று குழந்தை நல்லபடி பிறக்க வேண்டி கடவுளை வேண்ட...
சாதாரண பிரசவத்திற்கு வழியின்றி ஆயுதசிகிச்சை முறையில் என் மகனை என்னிடமிருந்து பிரித்தெடுக்க...
பிறந்த குழந்தை அழாதபோது நான் அதிர்ச்சியுடன் அழ...
மருத்துவர் ஒரு ஊசியை குழந்தைக்கு செலுத்தியவுடன் அனைவரையும் மகிழ்விக்கும் 'குவாகுவா' சத்தம்...
அவன் பிறந்தது நிலவு தூங்கும் நேரமான இரவு பதினொன்றரை மணிக்கு!
கோகுலக் கண்ணன் பிறந்த அதே நேரம் பிறந்த அவன் பெயரும் கண்ணனே!
கருத்துகள்
கருத்துரையிடுக