காதலில் விழுந்த தருணம்


கல்யாணம் இப்போது வேண்டாம் என்றபோது என்னைப் பார்க்க வந்த நீ விழிகளால் பேசியபோது என் மனத்தில் ஒரு சலனம் ஏற்பட்டது!!

உன் புகைப்படம் பார்த்த போதும்  தொலைபேசியில் பேசியபோதும் என் மனம் சற்றே உன்பால் காதல்  கொண்டது!

நம் திருமணப் பத்திரிகையை நீ எனக்கு அனுப்பிய தருணம் அதனைப் பிரித்தபோது  உன்னையே தொடுவது போன்ற உணர்வில் மயங்கினேன்!

திருமணத்திற்கு முன்னால் நீ என்னைப் பார்த்து பேசி சிரித்த நேரம் என் மனம் மயக்கத்தில் மூழ்க நானும் உன் மேல் காதல் கொண்டேன்!

திருமணத்திற்குப் பின் ஆண்டுகள் பலவாகியும் அன்று காதலில் விழுந்த மனது இன்னமும் சலிக்காமல் உன்னையே சுற்றி வருகிறது என் ஆருயிர்க் கணவனே!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்க நீ பல்லாண்டு!

தந்தை மனம்(100வரிக்கதை)

உணவு