6.பிள்ளை வரம் வேண்டி..(புதிது)
விக்ரமிற்கும் ராணிக்கும் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. விக்ரமின் அம்மா சரசுவிற்கு இது பெரிய குறையாக இருந்தது. எப்போதும் ராணியையே குறை கூறிக் கொண்டிருந்தாள்.
இனியும் தாமதிக்க வேண்டாம் என்று சொல்லி மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்தபோது குறை இருப்பது விக்ரமிடம் என்று தெரிந்தது. பல மருந்துகளைப் பரிந்துரைத்தார் மருத்துவர். விக்ரமிற்கு அதில் இஷ்டமில்லை.
'நாம் ஒரு குழந்தையைத் தத்து எடுத்தாலென்ன?' என்று ராணியிடம் கேட்க, கணவனுக்கு பிடிக்காத மருத்துவ சிகிச்சையை முறற்சிப்பதை விட இது சரியானதாகத் தோன்றியது. சரசுவிற்கு இதில் கொஞ்சமும் இஷ்டமில்லை. ஆனால் விக்ரம் தன் முடிவிலிருந்து மாறுவதாக இல்லை.
இருவரும் ஒரு அனாதை ஆசிரமம் சென்று ஒரு பெண் குழந்தையைத் தத்து எடுத்து வந்து அவளை சீரோடும் சிறப்போடும் வளர்த்தனர்.
ஒரு வயதில் அவள் பாட்டி என்று பாசத்துடன் சரசுவை அழைத்தபோது அவளை அள்ளி அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள் சரசு!
கருத்துகள்
கருத்துரையிடுக