சத்தம்

 

குழந்தையின் முதல் 

அழுகை சத்தம் 

தாய்க்கு மெய்சிலிர்க்க வைக்கும் உயிர் சத்தம்!

*****


சத்தம் இல்லாத இரவு!

தித்திக்கும் முத்த சத்தம்!

காதல் வாழ்வின்

சொர்க்கப் படிகள்!

முத்தத்திற்கும் சண்டை!

சத்தமான முத்தமா!

சத்தமில்லாத முத்தமா!

நீ முதலிலா!

நான் முதலிலா!

சத்தமுள்ள முத்தத்தில் 

கவிதை பிறக்குது!

சத்தமில்லாத முத்தத்தில்

காதல் பெருகுது! 


கருத்துகள்