எனக்கே எனக்காக
நான் தினமும் எழுதுவது
எனக்கே எனக்காக!
நாள் தவறினாலும்
நான் எழுதுவது தவறாது!
படித்ததை எழுதுவேன்..
பார்த்ததை எழுதுவேன்!
பிடித்ததை எழுதுவேன்..
நினைத்ததை எழுதுவேன்!
மனதில் தோன்றுவதை
எழுதாமல் இருப்பதில்லை..
மனதினுள் இருப்பதையும்
எழுதாமல் விட்டதில்லை!
எனக்கு கிடைத்த
அனுபவங்களையும்
வாழ்வின் முக்கிய நிகழ்வுகளையும்
வகையாக எழுதுகிறேன்!
பரிசும் வேண்டேன்..
பாராட்டும் வேண்டேன்!
பெருமையும் விரும்பேன்..
புகழும் விரும்பேன்!
இன்றும் எழுதுகிறேன்..
நாளையும் எழுதுவேன்!
எவருக்காகவும் அல்ல..
எனக்கே எனக்காக!
கருத்துகள்
கருத்துரையிடுக