நான்..
ரசனை இருப்பதால் ரசித்து மகிழ்கிறேன் நான்..!
தமிழைப் பிடிப்பதால் படித்து மகிழ்கிறேன் நான்..!
சுவை அறிந்ததால் ருசித்து சாப்பிடுகிறேன் நான்..!
அன்பை விரும்புவதால் சகமனிதரை நேசிக்கிறேன் நான்..!
தமிழை நேசிப்பதால் மாம்ஸ்பிரஸ்ஸோவில் எழுதுகிறேன் நான்..!
நான் யார் என்று கேட்பவர்க்கு நான் சொல்லும் பதில்!
நான் ஒரு பெண்!
பெற்றோரின் செல்ல மகள்!
உடன் பிறந்தோரின் அன்பு சகோதரி!
அன்புக் கணவரின் காதல் மனைவி!
குழந்தைகளின் பாசமுள்ள அம்மா!
பேரன் பேத்திகளின் நேசமுள்ள பாட்டி!
அன்புத் தோழிகளின் உடன் பிறவா சகோதரி!
கருத்துகள்
கருத்துரையிடுக